உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்குவது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு மிக மந்தகதியில் நடைபெறுவதாக கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் திருப்திகரமான நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் மிக மெதுவானவையாக காணப்படுவதாகவும் இது தொடர்பாக உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த ஆறு வருடங்களாக எதுவும் இடம்பெறவில்லை, விசாரணைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் ஒட்டுமொத்த செயற்பாடுகள் மிகவும் மந்தகதியில் இடம்பெறுகின்றன, மெதுவாக இடம்பெறுகின்றன என்பதால் எதுவும் இடம்பெறவில்லை என்பது அர்த்தமில்லை.
