குருவிட்ட பொலிஸ் நிலையத்தில் வழக்கு பொருட்களை முறையாக ஒப்படைக்காததற்காகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 4 பொலிஸ் அதிகாரிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 29 ஆம் திகதி குருவிட்ட – பொஹரபாவ பகுதியில் இந்த அதிகாரிகள் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோத மதுபானம் வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட ஒருவர் குருவிட்ட பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஆனால் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட வழக்குப் பொருட்கள் முறையாக ஒப்படைக்கப்படவில்லை.
இதன்படி, இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், இரத்தினபுரி குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Link: https://namathulk.com
