உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியை ஐ.சி.சி. 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.
இதுவரையில் முடிவடைந்த 3தொடர்களில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில் 2027-29ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறிய நாடுகளுக்கான டெஸ்ட்களை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி. தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடள், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் மாற்றமின்றி வழக்கமான 5 நாட்களுக்கு விளையாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறிய நாடுகள் விளையாடும் டெஸ்ட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றுக்கான செலவுகளை குறைக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
Link: https://namathulk.com
