26 பலம்வாய்ந்த அரசியல்வாதிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Aarani Editor
1 Min Read
SriLanka Politics

முன்னாள் பாதுகாப்பு தலைவர்கள் உட்பட 26 பலம்வாய்ந்த அரசியல்வாதிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த 26 பேரும் சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் கோடிக்கணக்கான ரூபா மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் பாதுகாப்புத் தலைவரின் சொத்துக்கள் குறித்து ஏற்கனவே விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த சொத்துக்கள் குறித்து அவர்களிடமிருந்து எதிர்வரும் நாட்களில் வாக்குமூலங்கள் எடுக்கப்பட உள்ளன.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்கப்படும் முன்னாள் பாதுகாப்பு பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆவார், அவர் கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவராக இருந்தார்.

அத்துடன் விசாரிக்கப்படும் ஏனைய அரசியல்வாதிகள் சிலரின் பெயர்களும் வெளியாகியுள்ளன.

அதற்கமைய, மகிந்த யாப்பா அபேவர்தன, மகிந்த அமரவீர, சாமர சம்பத் தசநாயக்க, திலும் அமுனுகம, ரோகித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, கஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, திஸ்ஸ குட்டியாராச்சி, வஜிர அபேவர்தன, மகிபால ஹேரத், அனுர பிரியதர்ஷன யாப்பா, மனுஷ நாணயக்கார, வடிவேல் சுரேஸ், துஷார சஞ்சீவ பத்திரன, ஹர்ஷன ராஜகருண, சாணக்கியன் ராசமாணிக்கம், சிவநேசத்துரை சந்திரகாந்தன், எச்.எம். சந்திரசேன, சாந்த அபேசேகர உள்ளிட்டவர்களாகும்.

இந்த அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதிகள் சட்டவிரோதமாக சொத்துக்களை பெற்றமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்து பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *