இரண்டு ரயில் பெட்டிகளுக்குள் ஆடம்பர வசதிகளுடன் கூடிய ஒரு தனித்துவமான ஹோட்டல் கட்டப்பட்டு நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் அது சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இரத்மலானையிலுள்ள புகையிரத வளாகத்தில், ரயில்வே தொழிலாளர்களால் இரண்டு ரயில் பெட்டிகளுக்குள் ஆடம்பர வசதிகளுடன் கூடிய ஒரு தனித்துவமான ஹோட்டல் கட்டப்பட்டு நிறைவடைந்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர அறிவித்தார்.
‘ஓடிஸி கேம்பர்’ (Odyssey Camper) என பெயரிடப்பட்ட இந்த ஆடம்பர ரயில் ஹோட்டல், இன்னும் சில நாட்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளது.
இந்த ஆடம்பர ரயில் ஹோட்டல் தற்போது நானுஓயாவிற்கு சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இங்கு பயணிகளுக்கு நீர்வீழ்ச்சிகளின் அழகிய காட்சிகள் மற்றும் மலைநாட்டின் இரம்மியமான இயற்கை எழிலை இரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இரத்மலானை புகையிரத வளாகத்தில் 21, 25 மற்றும் 26ஆவது பணிமனைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் புதுமையான முயற்சியாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பொது மேலாளர் தெரிவித்தார்.
Link: https://namathulk.com
