ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான முறையான முயற்சியை மேற்கொண்டு வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார்.
ஈரானியர்களிடம் போதுமான செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கலாம், ஆனால் அதை அணு ஆயுதமாக மாற்றுவதற்கு, தொழில்நுட்பம் மற்றும் விரிவான சோதனையும் தேவை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஈரானின் அணு ஆயுத தளங்களை ஆய்வு செய்த போதிலும், ஈரானின் தரப்பில் அணு ஆயுதமாக மாறுவதற்கான முறையான முயற்சிக்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் ஐ.நா. கண்காணிப்பு அமைப்பிடம் அவர் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெஹ்ரான் அணு ஆயுதத்தைப் பெறுவதற்கு மிக நெருக்கமாக இருப்பதாக நம்புவதாகக் கூறினார்.
ஆனால் ஈரானிய அதிகாரிகள் தங்கள் அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதியானது எனவும் அதைத் தொடர தங்களுக்கு முழு உரிமையும் உள்ளது எனவும் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com
