இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்சமயம் காலி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 485 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் பெத்தும் நிசங்க அதிகபடியாக 187 ஓட்டங்களையும், கமிந்து மெண்டீஸ் 87 ஓட்டங்களையும், தினேஸ் சந்திமல் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பங்காளாதேஷ் அணி சார்பில் நியாம் அசான் 05 விக்கெட்டுக்களையும், அஷான் மொஹமட் 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
முன்னதாக பங்காளாதேஷ் அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 495 ஓட்டங்களை பெற்றது.
இதன்படி 10 ஓட்டங்கள் முன்னிலையில் பங்காளாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடவுள்ளது.
Link: https://namathulk.com
