பேராசிரியர் ரகுராம் பதவி விலகலைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் பணிப்பகிஷ்கரிப்பில்

wp-namathulk.admin
0 Min Read

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் பனி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் .

யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலின் போது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அண்மையில் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தை தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதேவேளை 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் விரிவுரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடருமெனவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *