வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வடமாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்களை யாழிலுள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
2017ஆம் அண்டிலிருந்து இன்று வரை தற்காலிக அடிப்படையில் பணியாற்றிவரும் தமக்கு மாதாந்த வேதனமாக 22000 ரூபா மட்டுமே வழங்கப்படுவதாக டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் இதன்பொது தெரிவித்தனர் .
இதனால் பெரும் வாழ்வாதார சிக்கல்களை எதிர்நோக்கும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி அளுநரிடம் மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்தனர்.