பாடப்புத்தகங்களுக்கு மேலதிகமாக படிக்கும் எந்தவொரு விடயமும் அறிவை வளர்க்குமெனவும் இன்றைய இளைய சமூகம் அறிவைத் தேடும் பாதையிலேயே செல்லவேண்டுமெனவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார் .
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு ‘பச்சிலை’ நூலை வெளியிட்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசாங்க அதிகாரிகள் பலரும் தாம் மக்களுக்கு சேவை செய்கின்றோம் என்பதை மறந்து செயற்படும் நிலையில் அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும்படி அரச சேவையாளர்கள் செயற்பட வேண்டும் என ஆளுநர் கூறியுள்ளார் .
இலஞ்சம் பெற்று செயற்படும் அதிகாரிகளை மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச அதிகாரிகள் தாம் பெற்றுக் கொள்ளும் சம்பளத்திற்காவது அர்ப்பணிப்புட்ன் சேவையாற்ற வேண்டும் எனவும் ஏழைகளுக்கு செய்யும் உதவி கடவுளுக்கு செய்யும் கைமாறு எனவும் வடக்கு மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.
வடக்கின் அபிவிருத்தியை தொடர்வவதற்கு முதலீடு செய்வதற்கு முன்வருமாறு முதலீட்டாளர்களை அரசாங்கம் அழைத்துள்ள நிலையில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அரச அதிகாரிகள் செயற்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .