போக்குவரத்து பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் விசேட குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் கல்வல பகுதியில் கடந்த 20 ஆம் திகதி இரவு போக்குவரத்து பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளார் .