மலையகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதனால், நுவரெலியா-உடப்புஸ்ஸல்லாவ பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால், அப்பகுதியிலிருந்து நுவரெலியாவுக்குச் செல்லும் பாடசாலை மாணவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
அத்துடன், பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதால், அதன் அருகிலுள்ள பயிர் நிலங்கள் சேதமடைந்துள்ளன.
இதனிடையே கனமழை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே 75mm அளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமணடலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.