வவுனியா புளியங்குளம் பகுதியிலிருந்து அநுராதபுரத்திற்கு அனுமதிப்பத்திரமின்றி பசுமாடுகளை லொறியில் கொண்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறியொன்றினை சோதனையிட்ட போதே 27க்கும் அதிகமான பசு மாடுகள் கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் அநுராதபுரம் ரம்பாவ மற்றும் மிஹிந்தலை பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

