ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ் வருகைக்கு எதிராக சில குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து, குறித்த ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக பொலிசாரால் நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று அறிக்கை சமர்பிக்கப்பட்டது
இந்த அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட ஐந்து பேர் இன்று தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என யாழ் நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.
இந்த கட்டளைக்கு அமைய பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் மன்றில் ஆஜராகி தமது தரப்பு நிலைப்பாடுகளை தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, எவ்வித முரண்பாடுகளும் ஏற்படாதவாறு அமைதியான முறையில் கவனஈர்ப்பில் ஈடுபட முடியும் என நீதிமன்றம் அறிவித்து, குறித்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
