முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுசுதந்திரபுரம் பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுதந்திரப்புரம் பகுதியில் காலப்போகம் அறுவடை செய்து நெல் ஏற்றி வந்த உழவு இயந்திரமும் மோட்டார் சைகிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர் .
விபத்தின் பின்னர் உழவு இயந்திரத்துடன் தப்பிச் செல்ல முயன்ற சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுகுடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.