கிளிநாச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகமாலை,இத்தாவில்,வேம்பெடுகேணி போன்ற பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளீதரன் தலைமையில் நடைபெற்றது.
முகமாலை பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
யுத்தத்தினால் முழுமையாக இடம்பெயர்ந்து இன்றுவரை மீள் குடியமர முடியாத நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறித்த குடும்பங்களில் இதுவரை 30 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறவும்,60 குடும்பங்கள் தங்களின் காணிகளைப் பராமரிப்பதற்கும் பிரதேச செயலகத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.