வவுனியா, அவுசதப்பிட்டிய பகுதியில் மோட்டார் சைகிளில் ரயில் கடவையை கடக்க முயற்சித்த போது, குறித்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ரயிலில் மோதுண்டு காயமடைந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஈரப்பெரியகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
