வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இதுவரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க தவறிய அரசாங்கம், பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள விவசாயிகளுக்கு விரைவில் சாதகமான தீர்வை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை விவசாயிகளுடன் ஒப்பிடும் போது வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வங்கிகளில் கடன் பெற்றும்,நகைகளை வங்கியில் அடமானம் வைத்தும் விவசாயத்தை முன்னெடுத்துள்ள வறுமைக்கோட்டின் கீழ் உள்ள விவசாயிகளை காப்பாற்றுவது அரசாங்கத்தின் கடமையெனவும் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.
Link: https://namathulk.com