மட்டக்களப்பு வாகரை-வெருகல் கல்லரிப்பிலுள்ள பழங்குடிக் கிராம மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு இலவச போக்குவரத்து வசதியை வழங்கியுள்ளது.
மூன்று கிலோமீற்றர் தொலைவிலுள்ள மாவடிச் சேனையிலுள்ள பாடசாலைக்கு செல்வதற்கு வாகன வசதி இல்லாமல் நீண்ட காலம் கல்வியை இழந்திருந்த மாணவர்களின் நலன்கருதி இந்த இலவச போக்குவரத்து சேவை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
கனடாவிலுள்ள வள்ளுவம் அமைப்பின் பணிப்பாளர் ஜெஸ்லனட் ராஜன் செல்வநாயகத்தின் ஏற்பாட்டில் குறித்த வாகன வசதி வழங்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com