பாலஸ்தீனியர்களை வெளியேற்றிய பின்னர் காசாவை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனர்கள் வெளியேறிய பின்னர், போரினால் சிதைந்த காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி, “உலக மக்கள்” அங்கு வசிக்கும் வகையில் புனரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என தான் விரும்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நேற்று இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது காசாவை முழுமையாக அமெரிக்கா கைப்பற்றும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
Link : https://namathulk.com