நாட்டின் பெரும்பாலான நகரங்களில் வளியின் தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் முககவசங்களை அணியுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குருநாகல், கண்டி, காலி, இரத்தினபுரி,எம்பில்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற நகரங்களில் வளியின் தரம்
நேற்று(4) மிதமான அளவிலும் சற்று ஆரோக்கியமற்ற அளவிலும் இருந்ததாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம், சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைப்பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் வளியின் தரமானது இன்று AQI 85 முதல் 128 வரை இருக்குமெனவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வவுனியா,நுவரெலியா,புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் போன்ற நகரங்களில் வளியின் தரம் மிதமான மட்டத்திலுள்ளதாகவும்,குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் வடக்கிலிருந்து வரும் மாசடைந்த காற்றினால் வளியின் தரத்தில் எல்லை கடந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில் வளியின் தரக் குறிகாட்டிகள் சற்று ஆரோக்கியமற்ற நிலைக்கு அதிகரிக்கலாம் என்பதுடன்,இந்த நிலை பல நாட்களுக்கு நீடிக்கலாமெனவும்
வளியின் தர நிலை குறித்து இன்று வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.எனவே, முக கவசங்களை அணியுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதுடன்,
சுவாசிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளும் பட்சத்தில்,உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com