பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர் கட்சிகளின் கூட்டம், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று கூடியுள்ளது.
வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சேர்ந்த எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்..
பாராளுமன்ற கட்டட தொகுதியில் அமைந்துள்ள எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று இந்த கூட்டம் நடைபெற்றது.
மக்கள் நலனுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு முழு எதிர்ப்பையும் தெரிவிக்க இதன்போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com
