இந்தியாவின் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 18 ஊழியர்களை இடமாற்றம் வழங்கவும் அல்லது சுயவிருப்ப ஒய்வு வழங்கவும் தேவஸ்தான சபை தீர்மானித்துள்ளது.
இந்துக்களுக்கான மரபுகளை பின்பற்றாத குற்றத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள 18 ஊழியர்களில் தங்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான சபை தெரிவித்துள்ளது.
Link : https://namathulk.com