காசாவிலிருந்து பாலஸ்தீனியர்கள் கட்டாய இடம்பெயர்வுக்கு உள்ளாக்கப்படுவதை ஐ.நா எதிர்த்துள்ளது
காசாவிலிருந்து பாலஸ்தீனியர்கள் பெருமளவில் இடம்பெயர்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கட்டாய இடம்பெயர்விற்கான முயற்சிகள் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இது இன சுத்துகரிப்புக்கு சமனான நடவடிக்கையாக அமையும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
Link : https://namathulk.com