புத்தளம், பம்பல பிரதேசத்தில் வீதியில் பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில், முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரும் காயமடைந்துள்ள நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பஸ், வீதியில் பயணித்த லொறி ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முயற்சித்த போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் கூறினர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com