யாழ்ப்பாணம், மண்ணித்தலை பகுதியில் 100 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 27 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com
