நாட்டில் இலவச சுகாதார சேவையில் பணிபுரியும் அனைத்து சுகாதார நிபுணர்களின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகள் காரணமாக, நாட்டின் சுகாதார குறிகாட்டிகள் தற்போது சிறந்த மதிப்புகளைக் காட்டுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார துறையிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களுக்குமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
சுகாதார துறையின் எதிர்கால முன்னேற்றத்திற்காக தொழிற்சங்கங்களின் கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் பங்களிப்புகளைப் பெறுதல், அவர்களின் பிரச்சினைகளை இணங்கண்டு தீர்த்து வைத்தல் போன்ற பல்வேறுப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, தொழிற்சங்க பிரதிநிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை என அமைச்சர் கூறினார்.
Link : https://namathulk.com