உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து தமது நாடு விலகுவதாக ஆர்ஜென்டினா அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்திடமிருந்து கடந்த மாதம் அமெரிக்கா விடைபெற்ற பின்புலத்தில் ஆர்ஜென்டினாவும் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியும் , ஆர்ஜென்டினா ஜனாதிபதியும் மிக நெருக்கமானவர்கள் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்துய் வெளியிட்டுள்ளன.
இவ்வாறான அறிவிப்புக்கள, பொது சுகாதார நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் ஒரு சர்வதேச நிறுவனத்தை ஆபத்தில் வீழ்த்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க மற்றும் ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதிகள் பல விமர்சனங்களையும் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com