நிலக்கடலை மதிப்புக்கூட்டல் அலகு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள முத்துவிநாயகர்புரத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நேற்று வியாழக்கிழமை ( 06) திறந்து வைக்கப்பட்டது.
ஒட்டுசுட்டான் நிலக்கடலை உற்பத்தியாளர் சங்கத்தின் ஒர் அங்கமாக முல்லை அக்கிரி பிஸ்னஸ் லிமிடெட் நிறுவனம் மாற்றப்பட்டு,பிரதேச விவசாயிகள் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக்கப்பட்டு இயங்கி வருகின்றது.
இந்த நிறுவனத்தின் உற்பத்திகள் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் விற்பனை செய்யப்படும் நிலையில் சந்தை கேள்விகளை ஈடுசெய்ய முடியாத நிலை இருந்தது.
தற்போது உழவு நாற்று நடுகை அறுவடையிலிருந்து பொதி செய்தல் வரை இயந்திரமயமாக்கப்பட்டுள்ள நிலையில் சந்தைக்கேள்விகளை ஈடு செய்யுமளவுக்கு
உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றது.
இதன் மூலம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கும் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com