தலைமன்னாரில் கைதான 17 இந்திய மீனவர்களில் 13 பேரை விடுதலை செய்த மன்னார் நீதவான் நான்கு மீனவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த மீனவர்களுக்கு எதிரான வழக்கு இன்று எடுத்துக்கொண்ட போது 13 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டது.
ஏனைய நான்கு பேரில் இருவரின் கைவிரல் அடையாள சிக்கல் காணப்படுவதாலும், ஏனைய இருவரும் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளதாலும் இவர்கள் நான்கு பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட 13 பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபா தண்டப்பணத்துடன் கூடிய இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com