வட மாகாணத்துக்கு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தரவுள்ள இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகளை உள்ளடக்கிய குழு
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்திட்டங்களை வழங்கவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும், அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் மக்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள சீனக்குழுவினர்,மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 1500 பேருக்கான உதவிகளை யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கவுள்ளனர்.
Link : https://namathulk.com