யாழ்ப்பாணம் திருநெல்வேலி கலாசாலை வீதிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருடப்பட்ட 19 பவுன் நகை மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 03ஆம் திகதி 19பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வாங்குவதற்காகவே குறித்த சந்தேகநபர்கள் நகைகளை திருடியுள்ளதாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Link : https://namathulk.com