பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கு ஆளுங்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணையை அடுத்து, பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த கருத்தை கூறினார்.
இதன்போது, 2001 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற சலுகைகளைக் குறைப்பது மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவது தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவித்து வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், எதிர்க்கட்சி உறுப்பினர் அந்த முன்மொழிவை சமர்ப்பித்ததில் மகிழ்ச்சியடைவதாக கூறிய பிரதமர், எதிர்க்கட்சியில் உள்ள ஒருசில உறுப்பினர்கள் இதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார்.
Link : https://namathulk.com