தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்மித்த மக்களின் காணிகளும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க முடியாது என தையிட்டி காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணி உரிமையாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்குமான சந்திப்பொன்று இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
இதன்போது, மக்களது காணி நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தையிட்டி விகாரை கட்டப்பட்ட காணி மட்டுமல்ல, அயலில் உள்ள காணிகளும் சுவீகரிக்கப்படும் என அகில இலங்கை பௌத்த மகாசபை இறுமாப்புடன் கூறியுள்ளதாகவும் காணி உரிமையாளர்கள் கூறினர்.
இந்நிலையில் காணி உரிமை கோரி போராட உள்ளதாகவும், காணி உரிமையாளர்களாகிய தமக்கு போராட்டத்துக்கு பாரபட்சமற்ற வகையில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், போக்குவரத்து மற்றும் சிற்றூர்தி, முச்சக்கர வண்டி சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
Link : https://namathulk.com