அம்பாறை கல்முனை, கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில், 396 போட்டியாளர்கள் உள்ளடக்கி மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி நடாத்தப்பட்டது.
பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியின் நிகழ்வுகளில் ஒன்றான மரதன் ஓட்டம் பாடசாலையின் அதிபர் அருட்.சகோதரர் .எஸ்.இ.றெஜினோல்ட் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை வலயக்கல்வி பணிமனையின் கணக்காளர் க.லிங்கேஸ்வரன், சம்பத் வங்கியின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பிரதம முகாமையாளர் நிதர்சன் டேவிட் ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்து போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர் .
மரதன் ஓட்டப் போட்டியில் 162 மாணவிகளும் 234 மாணவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com