குருநாகல் – புத்தளம் தண்டவாளத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புனரமைப்பு பணிகள் காரணமாக புத்தளம் ரயில் பாதையில் 55 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள குறுக்கு வீதிக்கான கடவை மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய நாளை தண்டவாள புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் போது இந்த குறுக்கு வீதி முழுமையாக மூடப்படவுள்ளது.
இதன்போது, ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சிரமத்தைக் குறைக்கவும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு இலங்கை ரயில்வே திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Link : https://namathulk.com