மெக்சிகோவின் தென்பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லொரி ஒன்றுடன் பஸ் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பஸ்ஸில் தீப்பற்றியுள்ளது.
லொரி சாரதி அடங்கலாக 41 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 18 சடலங்களே இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளன.
விபத்தில் காணமல் போனவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்தமையால் விபத்து இடம்பெற்றதா என்பது தொடர்பில் ஆராயப்படுகிறது.
Link : https://namathulk.com