சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், பிரதமர் ஹரிணி அமரசூரியாவை பிரதமர் செயலகத்தில் சந்தித்தார்.
வரிக் கொள்கை, வரி வருவாயை திறம்பட நிர்வகித்தல் மற்றும் பொதுத்துறை செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பொருளாதார விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், நிலையான வளர்ச்சியை வளர்ப்பதற்கும் கொள்கை முயற்சிகளை வலியுறுத்தி, அரசாங்கத்தின் எதிர்கால நிகழ்ச்சி நிரலையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இக்கலந்துரையாடலில், சர்வதேச நாணய நிதியத்தின் பதில் நிர்வாக பணிப்பாளர் பி.கே.ஜி. ஹரிச்சந்திர, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த , இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க, மத்திய வங்கியின் உதவி ஆளுநர் சி. அமரசேகர, பொருளாதார ஆராய்ச்சிக்கான மேலதிக பணிப்பாளர் லசிதா ஆர்.சி. பத்பேரிய, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர், சிரேஷ்ட பொருளாதார நிபுணர் மற்றும் தொடர்பு அதிகாரி அமில ஜே. விஜயவர்தன, வெளியுறவு அமைச்சின் பொருளாதார விவகார பிரிவின் பணிப்பாளர் லஷிங்கா தம்முல்லகே, மற்றும் வெளிவிவகாரத் துறையின் பணிப்பாளர் நாயகம் சமந்த பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.
Link : https://namathulk.com