அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, அப்பகுதியை சேர்ந்த பிரபல வியாபாரிகள் இருவர் கடந்த 05ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை 05 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் விடுத்த உத்தரவிற்கமைய, பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து இருந்தனர்.
இந்த விசாரணைகளின் அடிப்படையில், நேற்று மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைபின் போது மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட சந்தேகநபர் தனது வீட்டில் கட்டிலின் கீழ் கேரள கஞ்சாவை பதுக்கி வைத்திருந்துள்ளார்.
அங்கிருந்து 18 கிலோ 169 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதோடு, இதன் பெறுமதி 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.
ஒராபி பாஸா வீதியை சேர்ந்த, 33 வயதான ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக , சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Link : https://namathulk.com
