நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபசார விடுதி பொலிசாரால் நேற்று முற்றுகையிடப்பட்டது.
இதன்போது நான்கு பெண்களும், விபச்சார விடுதி நிர்வாகத்தோடு தொடர்புடைய இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஆயுர்வேத ஸ்பா நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் செயற்பாடுகள் நடைபெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 21-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் வெளிமடை, இரத்தினபுரி, கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் கூறினர்.
சந்தேகநபர்கள் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com