இந்தியா, பெங்களூரில் நடைபெற்று வரும் ‘ஏரோ இந்தியா 2025’ விமான கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொண்டா, நிகழ்வின் ஒரு பகுதியாக இந்திய பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங்கைச் சந்தித்தார்.
இதன்போது, இரு நாடுகளின் கடல் எல்லைகளில் சட்டவிரோத கடற்றொழிலை தடுப்பதற்கான நடவடிக்கைகள், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு படையினருக்கான பல்வேறு பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இரு நாட்டு பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இருதரப்பு இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பின் மூலம், இருதரப்பு அதிகாரிகளும் பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
அத்துடன், உலகளாவிய பாதுகாப்பு சவால்களை திறம்பட எதிர்கொள்ள புலனாய்வு தகவல்களை பகிர்தல், கூட்டு பயிற்சிகளை நடத்துதல் மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
Link : https://namathulk.com