பாணந்துறை வாத்துவ பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.
பொலிசாரின் தாக்குதல் காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை தாக்கிய குற்றச்சாட்டில் வாத்துவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 04 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்களை நாளைய தினம் பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com