உலகெங்கிலும் உள்ள பலரின் வாழ்க்கையில் அறிக்கைகள் எழுதுவது முதல் பயணங்களைத் திட்டமிடுவது, உடற்பயிற்சிகள் மற்றும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது வரை, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அதிகரித்துள்ளது.
மந்தமான பொருளாதாரம், அதிக வேலையின்மை மற்றும் கொவிட் தொற்றின் பின்விளைவுகள் அனைத்தும் மக்களை உளரீதியாக பாதித்துள்ளன நிலையில் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
பெருமளவான மக்கள்தொகையுடைய சீனாவில் இளைஞர்களின் உற்ற நண்பனாக டீப்சீக் செயற்கை நுண்ணறிவுச் தொழில்நுட்பம் மாற்றமடைந்துள்ளது.
டீப்ஸீக் என்பது ஒரு ஜெனரேட்டிவ் AI கருவியாகும். இது ChatGPT மற்றும் கூகிளின் ஜெமினி போன்று தகவல்களை அடையாளம் காண பெரிய அளவிலான தகவல்களில் நிரலாக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக ஒரு நபரைப் போல உரையாடல்களைத் தொடர இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் சீனாவில் அதிகளவானோர் டீப்சீக்கோடு உரையாடத்தொடங்கியிருப்பதாகவும், அதன் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளத் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது ஒரு உளநல ஆதரவாக இம்மக்களிடையே செயற்பட்டுவருகின்ற நிலையில், செயற்கை நுண்னறிவின் பயன்பாட்டின் காரணமாக மனிதர்களுக்கிடையான தொடர்புகள் அருகிவிடுமோ எனும் அச்சமும் நிலவிவருகின்றது.
Link : https://namathulk.com