பாடசாலைகளில் எழும் பாலியல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கத் தவறினால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
பாடசாலைகளில் எழும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்கவேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தொண்டு நிறுவனங்கள், காவல்துறை, சமூக நலத்துறை மூலம் ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வுகளுடன் இணைத்து பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கும் வகையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனத் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என கூறிய அவர் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Link: https://namathulk.com