கொழும்பு -15, முகத்துவாரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 13 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வத்தளை , ஹெந்தல பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கிறேன்பாஸ் பகுதியில் மாதப்பிட்டிய பொது மயானத்திற்கு அருகில் கடந்த ஒக்டோபர் மாதம் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Link : https://namathulk.com