முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்தச் செய்தி தொடர்பிலான விசாரணையின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகாமையில் உள்ள மற்றுமொரு இடத்தில் நிலுவைத்தொகை செலுத்தப்படாததன் காரணமாக நேற்று நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த இடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம் அல்ல என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாவலர்கள் தங்கியிருந்த வீட்டிற்கான நீர் இணைப்பே துண்டிக்கப்பட்டுள்ளது.
இலட்சக்கணக்கான ரூபா கட்டணமாக செலுத்தப்படவிருந்த நிலையில், தொடர்ச்சியாக நிலுவையாகவே காணப்பட்டமையால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com