தென்கொரியாவில் போட்டிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த 32வயது காற்பந்து வீரரான ஹ்வாங் உய்-ஜோவிற்கு (Hwang Ui-jo ) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணுடன் தனது பாலியல் ரீதியான சந்திப்புகளைச் சட்டவிரோதமாக படமாக்கியதற்காக காற்பந்தாட்ட வீரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கிய கிளப் அலன்யாஸ்போர் அணிக்காகவும், தென் கொரியா தேசிய அணிக்காகவும் விளையாடுடிவந்த இவர் குறித்த குற்றச்சாட்டு காரணமாக 2023 இல் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
தென் கொரியாவில் கடந்த பத்தாண்டுகளில், ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை படமாக்கியதற்காக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Link: https://namathulk.com