மியன்மாரிலிருந்து மனித கடத்தலால் பாதிக்கப்பட்ட 260 பேரை தாய்லாந்து பொறுப்பேற்றுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
அவர்களில் அரைவாசியினர் எதியோப்பியாவை சேர்ந்தவர்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரிய மனிதக்கடத்தல் செயற்பாடுகளின் மத்தியில், இது திருப்புமுனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் , இலட்சக்கணக்கில் மக்களை கடத்தி சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதனூடாக தென்கிழக்கு ஆசியா முழுவதும், குறிப்பாக தாய்லாந்து ,மியான்மர் எல்லையில் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான வருமானத்தை பெற்றுக்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com