வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட வழக்கு நேற்று கிடப்பில் இடப்பட்டது.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த வழக்கை கிடப்பில் இடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பமாகியிருந்தது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் 2023 ஆகஸ்ட் மாதம் வேலன் சுவாமிகள், MK சிவாஜிலிங்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக கிளிநொச்சி பொலிசாரால் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
மண்ணை காதலித்ததால் காதலர் தினத்தன்று தாம் விடுபட்டதாக , வழக்கின் பின்னர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
எத்தனை வழக்குகள் வந்தாலும் இந்த மண் மீதான காதல் மாறாதது என வழக்கு விசாரணைகளின் பின்னர் அவர் கூறியுள்ளார்.
உயிர் இருக்கும் வரை இந்த மண் மீதான காதலும், இன விடுதலையும் அதற்கான போராட்டமும் எப்பொழுதும் தொடரும் என வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
Link : https://namathulk.com