யாழ்ப்பாணம் சாவகச்சேரி, தனங்கிளப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரனை , பிரதமர் ஹரிணி அமரசூரிய நேரில் சென்று பார்வையிட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரின் உதவியாளர்களை பார்வையிட்ட பிரதமர், உடல்நிலை தொடர்பிலும் கேட்டறிந்துக் கொண்டார்.
இதேவேளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனும் வைத்தியசாலைக்கு சென்று , பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் உள்ளிட்ட விபத்தில் காயமடைந்தவர்களை பார்வையிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் பயணித்த கார் யாழ்ப்பாணம் சாவகச்சேரி, தனங்கிழப்பு பகுதியில் நேற்று மாலை விபத்துக்குள்ளாகியது.
விபத்தில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினரும், அவரின் உதவியாளர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போதே, பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் விபத்துக்குள்ளாக்கியுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய சிறியரக வாகனத்தின் சாரதியை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொலிசார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
